நிலாவெளி பகுதியில், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக பெண் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்.
அத்துடன், குறித்த நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நேற்று பெண் உட்பட 05 சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20இலிருந்து 45 வயதுடையவர்கள் எனவும், குறித்த நபர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com