மலேசியாவின் கோலாலம்பூர் – புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் உடல் கருகிய நிலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு குழாய் வெடித்ததில் சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல காட்சியளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து பரவிய தீயால் சுமார் 50 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இதேவேளை பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த விபத்தில் 100ற்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேலளை சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com