இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்க தொடங்கியுள்ளது.
இந்த மழை எதிர்வரும் 09.04.2025 வரை நீடிக்கும்.
தற்போது கிடைக்கும் மழை இடி மின்னல் நிகழ்வுகளோடு இணைந்ததாகவே இருக்கும்.
இதன்போது, உயிர் மற்றும் உடற் பாதிப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பான சில ஆலோசனைகள் தரப்படுகின்றன:
- மார்ச்இ ஏப்ரல்இ மேஇ ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செறிவான மழைவீழ்ச்சி தொடங்கும் போதே அடுத்து இடி – மின்னல் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அனுமானித்து பாதுகாப்பிடத்திற்கு நகர்தல்.
- பரந்த மற்றும் வெட்ட வெளிகளில் நிற்பதனைத் தவிர்த்தல்.
- திறந்த வெளிகளில் திறந்த வாகனப் (சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்) போக்குவரத்தைத் தவிர்த்தல்.
- தொலைபேசி மற்றும் மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்த்தல்.
- மரங்களுக்கு அண்மையில் அல்லது கீழே நிற்பதனைத் தவிர்த்தல். மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக எக் காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்காதிருத்தல்.
- விவசாயிகள் விவசாய உபகரணங்களைப் பாவிக்காதிருத்தல்.
- ஒரு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடி – மின்னல் நிகழ்வுகள் இடம்பெறுமாயின் தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல். இது செவிப்பறைப் பாதிப்பைத் தடுக்கும்.
- இயன்றவரை கால் பாதத்தின் குதிப்பகுதி நிலத்தின் மீது படுவதனைத் தவிர்த்து காதுகளை மூடி நிலத்தில் இருத்தல்.
- வீட்டில் நின்றாலும் சமையலறைப் பகுதியில் நிற்பதனைத் தவிர்த்தல்.
மேற்கூறிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இடி – மின்னல் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
Link: https://namathulk.com