இவ்வருடம் மார்ச் மாதத்தில் மாத்திரம், மொத்தமாக 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 722,276 ஆக உயர்வடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முழுவதும், வாராந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளதோடு, மார்ச் 28 ஆம் திகதி அதிகளவான சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
குறித்த திகதியில் சுமார் 8,619 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாத்தில், இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் பதிவாகியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
குறிப்பாக, 39,212 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த பிற முக்கிய நாடுகள் பின்வருமாறு:
- ரஷ்யா – 29,177 வருகைகள்
- இங்கிலாந்து – 22,447 வருகைகள்
- ஜெர்மனி – 17,918 வருகைகள்
Link: https://namathulk.com