ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.
தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதைத் தொடர்ந்து சீனா 516 பில்லியனர்களுடனும் இந்தியா 205 பில்லியனர்களுடனும் 2ஆம் 3ஆம் இடம் பிடித்துள்ளன.
இதேவேளை 342 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உள்ளார்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
எனினும் கடந்தாண்டு 116 பில்லியன் டொலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டொலராக குறைந்துள்ளதால் அவர் உலக பணக்காரர் பட்டியலில் 18ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
link: https://namathulk.com/