இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டியில் இன்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இன்றிரவு 7.30 அளவில் பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமானது.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.
இதேவேளை தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணி பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மறுபுறம், குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/