மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாக இறை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்களில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களும் பங்கெடுத்திருந்தனர்.
இறைவழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு அனுஷா சந்திரசேகரன் கருத்து தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் தங்கள் தனித்துவத்தை நிரூபிப்பதற்காக சனநாயக தேசிய கூட்டணி எனும் கட்சியினூடாக களமிறங்கியிருப்பதாக கூறினார்.
இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம், கொட்டகலை பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை, அகரப்பத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, தலவாக்கலை நகர சபை ஆகிய ஐந்து சபைகளிலும் அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலின் கீழ் மக்கள் முன்னணியாக இம்முறை ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com