சமீபத்தில் அமெரிக்கா விதித்த வரிகளை சிந்தனையுடனும், சீராகவும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு நிவர்த்தி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனை கூறினார்.
இராஜதந்திரம் மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளுடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம், அரசாங்கம் பொருளாதாரத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி விதிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால பொருளாதார உறவுகளைக் கொண்ட இலங்கை உட்பட உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் கட்டணக் கட்டமைப்பு ஒரே இரவில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்றும்இ அது கடந்த கால கொள்கை வழிகாட்டுதல்களால் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com