பல நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று அறிவித்துள்ள நிலையில்இ இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இதேவேளை வியட்நாமுக்கு 46% சீனாவுக்கு 34% இந்தியாவுக்கு 26% பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com