காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் – கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பலஸ்தீனியர்கள் பலி

Aarani Editor
0 Min Read
காசா

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் உட்பட 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் கான் யூனிஸ் நகர் மீதே இஸ்ரேல் இந்த கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததுடன் இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அடங்குகின்றனர்.

ஹமாஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *