காலி, பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் தெற்கு மாகாண சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு பூஸ்ஸ பகுதியில் சோதனை நடத்தினர்.
இதன்போது,மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு துப்பாக்கியுடன் ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரத்கம பகுதியில் பொலிசார் சோதனை நடத்தினர்.
இதன்போது, பெண் ஒருவருடன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ பிஸ்டல், ஒரு மெகசின் மற்றும் 9 மி.மீ தோட்டாவும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com