சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட ஒருதொகை பீடி இலைகளுடன் இருவர் கைது.

Aarani Editor
1 Min Read
Illegal

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 675 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு இலங்கை கடற்படையினரால் கொண்டு சோதனையிடப்பட்டது.

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 20 பைகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி ஆகியன கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 29 வயதுடைய கல்பிட்டிஇ ஜனசவிபுர மற்றும் சிங்கபுர பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

சந்தேகநபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *