ஜோஸ் பட்லர் அதிரடி – ஆர்.சி.பி.யை வீழ்த்தியது குஜராத்

Aarani Editor
1 Min Read
Gujarat

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாகப் பெற்றுக்கொடுத்தார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *