மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தலதா மாளிகை மற்றும் மல்வத்து-அஸ்கிரி பீடங்கள் 15 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளன.
அஸ்கிரிய பீடத்தின் தலைமை பீடமான மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கத்தினருடன் புனித பல் நினைவுச்சின்னத்தின் அருகே கூடி பிரித் ஓதி ஆசீர்வாதம் வழங்கினர்.
பேரழிவில் இறந்த உயிர்களை கௌரவிப்பதற்கும், மியான்மர் மக்களின் நல்வாழ்வு மற்றும் மீட்சிக்காக பிரார்த்தனை செய்வதற்கும் இந்த வழிப்பாடு நடத்தப்பட்டதாக தலதா மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த நன்கொடை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் புனித தலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்களால் இலங்கையில் உள்ள மியான்மர் தூதரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
Link: https://namathulk.com