ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Aarani Editor
1 Min Read
ஹிக்கடுவ

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *