IPL2025 – புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடம்

Aarani Editor
1 Min Read
IPL2025

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை இன்றைய 15ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

இதனையடுத்து டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.

மேலும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தாம் எதிர்கொண்ட 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி அடங்கலாக 4 புள்ளிகளுடன் முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வி என்ற அடிப்படையில் 5ஆவது மற்றும் 6ஆவது இடத்தை பிடித்துள்ளன.

3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 7,8 மற்றும் 9 ஆவது இடத்தில் உள்ளன.

இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *