மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் மோசடி – கோப் குழுவில் வெளியான தகவல்.

Aarani Editor
1 Min Read
விசாரணை

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அடிப்படையில் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோப் குழுவின் விசாரணையின் போது, அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பண மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 செப்டம்பர் 30 வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு சொகுசு வாகன வரி விலக்கு உயர்த்தப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு முக்கிய நிறுவனங்கள் 640 அனுமதிப்பத்திர பெறுநர்களுக்கு வசதிகளை வழங்கிய இறக்குமதியாளர்களாக செயல்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த வெளிப்படுத்தலின் படி, அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் போர்வையில் வியாபாரம் ஒன்று நடந்துள்ளதாக கோப் குழுவிற்கு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத நான்கு நபர்களுக்கு மின்சார வாகன அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இவை அனைத்தையும் செய்ததாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *