அமெரிக்காவின் புதிய வரி தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையே தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வரிகள் விதிக்கப்படும்போது ஒரு நாடாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் இங்கு விரிவாக விவாதிக்கப்படும்.
இந்த விடயத்தில் சாத்தியமான நிவாரணம் குறித்து இலங்கை அரசாங்கம் விரைவில் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com