வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், நிதி அமைச்சு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதிகள் மீது 44% அமெரிக்க வரி விதிக்கப்படுவது குறித்த கவலைகளை குறித்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
மார்ச் 2023 முதல் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் உள்ள இலங்கை, அதன் பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் அமெரிக்காவின் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
பொருளாதாரம் நிலைபெற்று 2024 ஆம் ஆண்டில் 5% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலகளாவிய தேவை மந்தநிலை முன்னேற்றத்தை பாதிக்கலாம் எனவும் அரசாங்கம் எச்சரித்தது.
வர்த்தக தடைகளை குறைப்பதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
Link: https://namathulk.com