இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜனாதிபதி திசாநாயக்கவால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷண’ என்ற விருது தனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமெனவும் பிரதமர் கூறினார்.
இந்த உயரிய கௌரவம் தனக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல எனவும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதைடியனவும் பிரதமர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com