அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் முதல் அரச தலைவர் என்ற வகையில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது குழுவினரையும் வரவேற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தப் பயணம்இ இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தையும் நட்பையும் பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான வரலாற்று, மத மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்ட அண்டை நாடுகளாக இலங்கை இந்தியா இருந்த வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, அமைதியையும் நாடுகளின் இறையாண்மையையும் ஊக்குவிக்கும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையே தமக்கான வழிகாட்டல் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இதற்கு சற்று முன்பாக, பிரதமர் மோடியும்டன், இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்துரையாடலில் ஈடுப்பட்டமையையும் ஜனாதிபதி எடுத்துக்காட்டினார்.
இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மகோ-அனுராதபுரம் ரயில் பாதையில் நிறுவப்படவுள்ள சமிக்ஞை அமைப்புக்காக வழங்கப்பட்ட 14.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்கியமைக்காக பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இந்த இரண்டு திட்டங்களையும் நாளை அனுராதபுரத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்தும் பிரதமருடன் உரையாடியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையில் முக்கிய துறைகளில் இந்திய முதலீட்டை அதிக அளவில் ஊக்குவிக்க இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவை எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், சமீபத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்தமையால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.
மேலும், மீனவர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கு கூட்டு அணுகுமுறையின் அவசியம் தொடர்பாகவும் இங்கு விவாதிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Link: https://namathulk.com