இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் ( Major General Faheem Ul Aziz) கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவை சந்தித்தார்.
உயர்கல்வி மற்றும் தொழில்கல்வித்துறையில் இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது தொடர்பாக இச்சந்திப்பில் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
தற்போது இலங்கை மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்காக பாகிஸ்தானில் புலமைப் பரிசில் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயம், கால்நடை வள தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல் போன்ற துறைகளுக்காகவும் புலமைப் பரிசில் வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அவ்வாறு தொழிற்கல்வி துறையில் மாணவர்களுக்கு உயர்தரத்திலான தொழிற்பயிற்சி வழங்குவதற்காக பாகிஸ்தான் பயிற்சியாளர்களினால் இலங்கையில் பயிற்சி அமர்வுகளை நடாத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
Link: https://namathulk.com