கொழும்பில் மூடப்படும் வீதிகள் குறித்து பொலிஸார் வௌியிட்ட புதிய அறிக்கை.

Aarani Editor
3 Min Read
கொழும்பில் மூடப்படும் வீதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு செயல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும் முறை குறித்து பொலிசார் இன்று புதிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காரணமாக வீதிகள் மூடப்படும் காலகட்டத்தில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என்று குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காலி முகத்திடலில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை பயணிக்க உள்ளார். இதனால் காலை 8:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை, காலி முகத்திடல் சுற்றுவட்டம், காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, ஆல்பர்ட் கிரசண்ட், நந்தா மோட்டார்ஸ் சந்தி, சுதந்திர வீதி, சுதந்திர சுற்றுவட்டம் மற்றும் சுதந்திர சதுக்கம் வரையிலான வீதிகள் மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் தும்முல்லஇ பௌத்தாலோக மாவத்தைஇ விஜேராம சந்தி இடதுபுறம்இ ஹோர்டன் விஜேராமஇ கண் வைத்தியசாலை வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறிஇ தர்மபால மாவத்தைஇ கண் வைத்தியசாலைஇ ஹோர்டன் சுற்றுவட்டத்தில் இடதுபுறம் திரும்பிஇ பௌத்தலோக மாவத்தை வழியாக வௌியேற முடியும்.

காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.

இதனால் காலை 9:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை அந்த வீதி மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கொழும்புக்கு நுழையும் வாகனங்கள், கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள், அதே வீதிகளை பயன்படுத்தி வெளியேறலாம்.

காலி முகத்திடலில் இருந்து காலி மத்திய வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.

இதனால் காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரை தடாக சுற்றுவட்டம், ஹோர்டன் கிங்ஸி சந்தி, டட்லி சேனாநாயக்க மாவத்தை, டி.எஸ். சந்தி, மொடல் பார்ம் சந்தி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, பொல்துவ சந்தி, பாராளுமன்ற வீதி வழியாக பெலவத்த அபேகம வளாகம் வரை மாலை 4:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதிகள் மூடப்படும்.

பிரதமரின் வாகனத் தொடர் கடந்து செல்லும் முனையங்களுக்கு ஏற்ப வீதிகள் படிப்படியாக திறக்கப்படும்.

இதன்போது, கொழும்பிலிருந்து வெளியேற, பண்டாரநாயக்கபுர சந்தி, கொட்டா வீதி வழியாக புத்கமுவ அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த சந்தி வழியாக கடுவெல நோக்கி செல்லலாம்.

பழைய கொட்டா வீதி வழியாக வெலிகட சந்தி, நாவல வீதி வழியாக ஹைலெவல் வீதிக்கு செல்லலாம்.

அத்துடன், கொழும்புக்கு நுழைவதற்கு பெலவத்த, பாலந்துன முனையத்தில் வலப்புறம் திரும்பி, கொஸ்வத்த வீதி வழியாக, அம்பகஹ சந்தியில் வலப்புறம் திரும்பி, ஐ.டி.எச். வழியாக பழைய அவிசாவளை வீதி ஊடாக கொழும்பு நோக்கிச் செல்லலாம்.

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை இந்திய பிரதமர் பயணிக்க உள்ளார்.

இதனால் காலி மத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம், ஜனாதிபதி மாளிகை வரை மாலை 6:00 மணி முதல் பிரதமர் திரும்பி வரும் வரை வீதி மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் கொழும்புக்கு நுழைவதற்கு, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தியில் இடப்புறம் திரும்பி, கங்காராம வழியாக கொம்பனித்தெரு சந்தி, செரமிக் சந்தி வழியாக கொழும்புக்கு நுழையலாம்.

கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கு அதே வீதியை பயன்படுத்தி வெளியேறலாம்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *