இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் தலைவர்களின் சந்திப்பின் பின்னர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் தலைவர்களான ஆர். சம்பந்தன் மற்றும் திரு. மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இருவரும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் தாம் வலியுறுத்தியதாக மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது வருகையின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தமிழ் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் மோடி கூறியுள்ளார்.
Link: https://namathulk.com/