துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் மட்டக்களப்பு நகருடன் புதூர் பகுதியை இணைக்கும் பாதை தொடர்பிலான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை விமானப்படைக்கான காணியின் ஊடாக புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர் புகையிரத நிலையத்தில் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்தார்.
Link: https://namathulk.com