யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் பருத்தித்துறை நகரசபையினர் அடாவடித்தனமாக நகர சபை கழிவுகளை கொட்டும் சம்பவம் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் உள்ளன.
குடத்தனை மக்கள் பிரதானமாக விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இவர்கள் விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தும் நிலங்களில் இந்த கழிவினை கொட்டுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமின்றி எதிர்காலத்தில் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பன முற்றாகவே பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்களம் குறிப்பிட்டனர்.
Link: https://namathulk.com