200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான வாழும் உறவுப் பாலமாக மலையக மக்கள் திகழ்வதாக பாரத பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மலையக அரசியல் தலைவர்களின் சந்திப்பின் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் மோடி இதனை பதிவிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
Link: https://namathulk.com/