வவுனியா குருமன்காடு பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பஸ் நிலையம் நகரசபையால் இன்று அகற்றப்பட்டது.
பழமையான குறித்த பஸ் தரிப்பிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.
இதனை, அகற்றுமாறு நகரசபைக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து இன்றையதினம் நகரசபையால் குறித்த தரிப்பிடம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிக்கு அண்மையில் தேவையான இடத்தில் புதிய பஸ் தரிப்பிடம் ஒன்றை அமைக்க உள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com