ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.
ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹாவ – அநுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தனது விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அவர் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.



Link: https://namathulk.com