இஸ்ரேலுக்குச் சென்ற இங்கிலாந்தின் இரு பெண் எம்.பிக்களுக்கு அந்நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் இஸ்ரேலுக்குச் சென்றனர்.
குறித்த குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த யுவான் யாங் மற்றும் அப்திசம் முகமது ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம், குறித்த இருவரும் இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களைப் பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில் குறித்த எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
link: https://namathulk.com