இன்று மதியம் 12:12 மணியளவில் இலங்கையின் ஐந்து நகரங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் தரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை, கெளிங்கந்த, கஹவத்த, பொக்குநுதென்ன மற்றும் மஹவெலதொட்ட ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக நேற்று முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
Link: https://namathulk.com