இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி ஷ்யாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
Link: https://namathulk.com