அரசாங்க வைத்தியசாலையை பொதுமக்களுக்கு உகந்த, மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுவதற்காக, நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கும் வைத்தியசாலையின் ஆய்வகத்தின் ஹிஸ்டோ கெமிஸ்ட்ரி துறையை தரப்படுத்துவதற்கும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை கூறினார்.
இதன்போது, நோய்வாய்ப்பட்ட பொதுமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு, மற்றும் வசதியான இடமாக மாற்றுவதும் சுகாதார அமைச்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன். லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அனைத்து துறைகளும், வார்டுகள், வௌி நோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் கதிரியக்கவியல் துறை ஆகியவை இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நோய்வாய்ப்படும் குடிமக்களுக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பு சேவையை வழங்குவது சுகாதார நிபுணர்களின் பொறுப்பு எனவும் அமைச்சர் கூறினார்.
இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் தேவையான தொழில் சார்ந்த திறனை வழங்கும் எனவும், நோயாளிக்கு மிக உயர்ந்த அளவிலான பராமரிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
link: https://namathulk.com