அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுத்துள்ளனர்.
‘கைகளை விடுங்கள்’ என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க வேலைத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை மக்கள் காட்டியுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் புதிய வரித்திட்டம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்பவற்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் விமர்சித்துள்ளனர்.