இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலத்தின் அருகே கருப்புக்கொடி போராட்டம் ஒன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்கவில்லை எனத் தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
Link: https://namathulk.com