முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து மாணிக்கபுரம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்தனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாதைகளையும் காட்சிப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.









Link: https://namathulk.com