இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது, நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச சிறுத்தை புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
இந்த புகைப்படம் தொடர்பில் விளக்கமளித்த சஜித் பிரேமதாச, வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த ‘ஐ-ஒன்’ என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, சனிக்கிழமை (05) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பில் வழங்கியது பெரும் கௌரவமாகும் என தெரிவித்தார்.
ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு — இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
link: https://namathulk.com