இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இன்றிரவு 7.30 அளவில ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்தில்; ராஜஸ்தானை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.
link: https://namathulk.com