தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.
அவர் தனது 38ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 61,713 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு இவர் தெரிவு செய்யப்பட்டார்.
தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவின் நாப்பாவலவில் பிறந்த இவர் திறந்த பல்கலைக்கழக பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.