கடல்சார் பாதுகாப்பு சவால்கள், போதைப்பொருள் கடத்தல், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில், இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பலான ‘சஹ்யாத்ரி’க்கு விஜயம் செய்தபோது பிரதி அமைச்சர் இதனை கூறினார்.
இதன்போது, 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய உயிர்நாடியாக உள்ளதாகவும், இது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட கூட்டு முயற்சிகளை அவசியமாக்குகிறது எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com