காசாவின் கான் யூனிஸில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலினால் இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு 9 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்திலிருந்து 200 ஊடகவியலாளர்களும், ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com/