எதிர்வரும் 10ம் திகதி முதல், கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி. போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன.
எனினும் 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் உள்ளது.
அதன்படிஇ இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சீமெந்து, வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
குறிப்பாகஇ பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால்இ எதிர்வரும்இ 10ம் திகதி வெங்காயம் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சரக்கு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள்இ மிதவைகள் கையாள்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன்இ சுங்கம்இ குடிவரவு குடியகல்வுஇ சுகாதாரத்துறை ஆகிய பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com