பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
Link: https://namathulk.com