யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றையதினம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிசார் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரது வீட்டில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட 75 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை சந்தேக நபரை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Link: https://namathulk.com/