இலங்கை மத்திய வங்கி அதன் முதன்மை வெளியீடான 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கை நிதியமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தது.
குறித்த அறிக்கையானது, நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் அறிக்கையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ள இலங்கைப் பொருளாதாரம், சவால்கள் இருந்தபோதிலும், பல கடன் நெருக்கடியில் சிக்கிய நாடுகளை விட வேகமாக மீட்சிக்கான பாதையில் முன்னேறி செல்வதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.