2017 இல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர்.
அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் அது பின்னர் கைவிடப்பட்டு தற்போது மீள பேசுபொருளாகியுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான திட்டவடிவமைப்பு படங்களும் வெளியாகியிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான முதற்கட்ட வடிவமைப்பு 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா X தளத்தில் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com