கொழும்பு – ராஜகிரியவில் அமைந்துள்ள பொழுதுபோக்கு அரங்கில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாரிய தீ பரவல் ஏற்பட்டது.
எனினும் குறித்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவலையடுத்து, கோட்டை மாநகர சபையினால் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீ பரவல் காரணமாக நிகழ்வு அரங்கில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Link: https://namathulk.com