வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரிக் கொள்கையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்போதைய வர்த்தக உறவுகள் மற்றும் புதிய அமெரிக்க வரிக் கொள்கை இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
2022 இல் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான செயல்முறை குறித்தும், தற்போது நடைமுறையில் உள்ள IMF திட்டங்களை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா விதித்துள்ள வரிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டன.
Link: https://namathulk.com/