இலங்கையில் உள்ள அனைத்து பெண்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடையவும் தங்கள் ஆற்றல்களை முழுமையாகப் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற IMRA மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘IMRA சிறப்பு விருது விழா 2025’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் கூறினார்.
நாம் இங்கு கூடியிருப்பது, சாதனைகளைக் கொண்டாடுவதற்காக மட்டுமன்றி, இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களின் வியத்தகு பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காகவும் ஒன்றுகூடியிருக்கிறோம் என பிரதமர் தெரிவித்தார்.
சட்டம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் கல்வி, ஊடகம் மற்றும் தொழில்முயற்சி வரை பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கும் இந்த பெண்கள் எமது சமூகத்தில் வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுல்ல, அவர்கள் அதன் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர் என பிரதமர் கூறினார்.
நாம் இச்சந்தரப்பத்தில் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் பெண்களின் கூட்டு வலிமையையும், மீளாற்றலையும் கொண்டாடுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இவ்விழாவில்இ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வரும் விருதுகளையும் வழங்கிவைத்தார்.
IMRA சிறப்பு விருதுகள் சட்டத்துறை திருமதி சஈதா பாரி, கலை மற்றும் கலாசாரம் – அமீனா ஹுசைன், புலமைப்பரிசில் மற்றும் கல்வி – ரமோலா ரசூல், சுகாதாரம் மற்றும் மருத்துவம் – பேராசிரியர் பசீஹா நூர்தீன், கட்டிடக்கலை – ஷெஹெலா லத்தீஃப், ஷிஹெலா லத்தீஃப், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சியாமா யாகூப், IMRA வளர்ந்து வரும் நட்சத்திர விருது விளையாட்டுத் துறை – ஹம்னா கிசார், கல்வி – சாஜிதா ராசிக், ரிஸ்கா நௌஷாத், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் சந்ரா வந்துராகல, சிவநந்தினி துரைசாமி, சுனேலா ஜெயவர்தன மற்றும் அன்பேரியா ஹனிஃபா ஆகியோருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
Link: https://namathulk.com/