குருநாகல், வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில், முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிலையத்தில் LP எரிவாயுவை நிரப்ப லொரி ஒன்று சென்றபோது இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த இடத்தில் இருந்த இரண்டு எரிவாயு தொட்டிகளில், ஒவ்வொன்றும் சுமார் 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி எரிவாயு பரிமாற்ற நடைமுறையை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குருநாகல் மாநகர தீயணைப்புத் துறை, குருநாகல் பொலிசார் மற்றும் இலங்கை இராணுவத்தின் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/